பிரதான செய்திகள்

“வெளி மாகாணங்களை சேர்ந்த எவரும் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டாம்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் ஒருவரை, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன், இன்று (07) தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“வெளி மாகாணங்களை சேர்ந்த எவரும் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டாம். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் மூவின மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

“மூவின மக்களும் வாழும் இம் மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் பொருத்தமானவராக இருப்பார்.

“வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களே கிழக்கின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். எமது மாகாணத்தை சேர்ந்த பொருத்தமான ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். இதுவே எமது மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

“எனவே, கிழக்கு மாகாண ஆளுநரை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யும் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிக்கவும்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புத்தளத்தின் பல பகுதிகளிலும் வௌ்ளம்: மன்னார் வரையான பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது

wpengine

தற்கொலை! ஊடகங்களில் வெளியிட வேண்டாம்

wpengine

டிசம்பர் முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு: சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோர் பாதிப்பு

wpengine