செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

வெளிநாட்டு மோகம், 80 லட்சம் ரூபாவை இழந்த விரக்தியில் ஒருவர் தற்கொலை!!

வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவியிடம் இறுதியாக கூறிய விடயம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார்.

குறித்த முகவர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள வழங்குமாறு தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணம் ஒன்லைனில் களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார்.

இதனால் விரக்தியில் நேற்று முன்தினம் (14) அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். வைத்தியசாலையில் அனுமதி பின்னர் காலை வாந்தி எடுத்துள்ளதுடன் மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

பின்னர் அவர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

பணத்தை வழங்க முடியாத நிலையில் தான் இந்த ஐ.தே.க அரசாங்கம் இருக்கின்றது.

wpengine

கருணா அணியின் முக்கிய புள்ளி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது..!

Maash

மன்னார் பிரதேச செயலகத்தில் Covid தடுப்பு

wpengine