பிரதான செய்திகள்

வெலிமடையில் தொழுகை முடிந்த பின் உயிரிழந்த சம்பவம்.

வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் கால் தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெலிமடை குருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜும்மா பள்ளிவாசலில் 09.08.2016 அன்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில, பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற பாதையில் நடந்து செல்லும் போது கால் தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதன்போது மேற்படி நபர் அயலவர்களால் மீட்கப்பட்டு தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருப்பதாக விசாரணையை மேற்கொண்டு வரும் வெலிமடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி உயிரிழந்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளராக கடமைபுரிந்தவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Related posts

றிசாத்தைப் போன்று எவரும் பணியாற்றியதில்லை மு.கா.கட்சியின் முன்னால் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி மில்ஹான்.

wpengine

ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு! சென்னையில் சுவரொட்டி

wpengine

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இப்தாரும் முஸ்தபா நினைவுப் பேருரையும்

wpengine