பிரதான செய்திகள்

வீதியில் வெற்றிலை துப்பியதால் வந்த விளைவு

இன்று (08) முதல் வீதிகளில் வெற்றிலையை துப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ பொலிஸ் சுற்றாடல் பிரிவுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வீதிகளில் எச்சில் துப்புவதால் கடுமையான மாசு ஏற்படுவதோடு, கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் படி குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மன்னார்,வவுனியா வீதியில் கடல் அலை

wpengine

சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலையில் இலங்கை பெண்கள்

wpengine

இன்று மாலை 6மணிக்கு ஊரடங்கு சட்டம்! திங்கள் வரை

wpengine