பிரதான செய்திகள்

வீட்டு திட்டத்தில் யாழ் முஸ்லிம்களுக்கு அணியாயம்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதில் காணப்படும் இழுபறியைக் கண்டித்து நேற்று  கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எஸ். தவராசா, வட மாகாண சபை உறுப்பினர்களான அயூப் அஸ்மின் , இம்மானுவேல் அர்னோல்ட் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் முஸ்லிம் விவகார, தபால் தொடர்பாடல் அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் ஆகியோரிடம் கையளித்தனர்.

Related posts

ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த – சிங்கள நாடு. தமிழர்கள் புரிய வேண்டும்

wpengine

ரணில்,மைத்திரியின் 3வது அமைச்சரவை மாற்றம் முழு விபரம்

wpengine

கிழக்கின் பல நகரங்களில் இயங்கி ரூ.200 கோடியை ஏப்பம் விட்ட நிறுவனம்

wpengine