செய்திகள்பிரதான செய்திகள்

வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை.!

ராகம (Ragama) பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை சம்பவம் நேற்று (05) மாலை ராகம – தலகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இறந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, ​​அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வாகன எரிபொருள் திறன் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்தது லங்கா IOC

Editor

இனவாத செயலை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

wpengine

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்.!

Maash