விவசாய அமைச்சருக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் முறைப்பாடு

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், வட மாகாண விவசாய அமைச்சர் சீ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் முறைப்பாடு செய்ய உள்ளனர். கடந்த காலங்களில் அமைச்சின் ஊடாக கோடிக் கணக்கில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் விவசாய அமைச்சரை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் விசாரணை நடத்த ஆர்வம் காட்டுவதில்லை எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுமார் 20 பேர் அடங்கிய மாகாணசபை உறுப்பினர்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares