பிரதான செய்திகள்

விவசாயிகள் ஆர்பாட்டம்! விவசாய அமைச்சரின் வீடு சுற்றிவளைப்பு

ஏற்கெனவே இருந்தது போல், உர மூடையொன்றை 350 ரூபாய் நிவாரண விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையொன்றை அறிவிக்குமாறும் வலியுறுத்தி, அநுராதபுரம் மாவட்ட விவசாயிகள் இன்று, விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் வீட்டைச் சுற்றிவளைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அநுராதபுரம் மார்க்கட் பிளேஸில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விவசாயிகளின் ஆர்ப்பாட்ட ஊர்வலம், விவசாய அமைச்சரின் ‘செனசும’ வீட்டுக்கு முன்னால் சென்று, வீட்டின் பிரதான நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர், அமைச்சருக்கும் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இடையே தொலைபேசியில் உரையாடலொன்று இடம்பெற்றதை அடுத்து, சில நிமிடங்களின் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலைசெய்வோருக்கு புதிய தொழில்நூற்பம்

wpengine

வில்பத்து தேசிய பூங்காவிற்கு ஆணைக்குழு வேண்டும் என கோரிக்கை

wpengine

Newzeland Prime minister opened a pannala Farm Training center

wpengine