விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ)

கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங்,  தனது அணிக்காக விளையாடிய
போது  மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

டினாமோ புக்காரெஸ்ட் அணியை சேர்ந்த கால்பந்து வீரர்  பேட்ரிக் எகெங்  (26).  இவர், வீடொரல் கான்ஸ்டன்டா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில்,  தனது அணி சார்பில் 62வது நிமிடத்தில் மாற்று போட்டியாளராக களமிறங்கினார்.

                                             மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பேட்ரிக்FoodballplayarPatrickEkeng1

ஆனால் போட்டி நடந்தபோது மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.  அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்,  2 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார்.  அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி புக்காரெஸ்ட் அணி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கால்பந்து வீரர் பேட்ரிக் கிளாட் எகெங்கை இன்றிரவு (நேற்று) இழந்து விட்டோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரின் சார்பிலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய கடவுள் அருள் புரியட்டும்” என தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு எகெங்கின் முன்னாள் அணியான கார்டோபாவும் ட்விட்டரில், பேட்ரிக் எகெங்கின் மரணத்திற்கு எங்களது சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares