வில்பத்து வனத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் சபையில்! உடுவே தம்மலோக்க தேரர் சிறையில் -விமல் வீரவன்ச ஆவேசம்

உடுவே தம்மலோக்க தேரரை கைது செய்தமைக்கான காரணம் என்ன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு எம்.பி.யான விமல் வீரவன்ச சபையில் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

இன்று புதன்கிழமை சபையில் வாய்மொழி கேள்விக்கான நேரத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய விமல் எம்.பி. மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

உடுவே தம்மலோக்க தேரர் இந்நாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவொரு தேரராவார். அவரை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறு தேரர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு தெரியாமல் அவர் கைது செய்யப்பட்டிருக்கமாட்டார். அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? வில்பத்து வனத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் சபையில் இருக்கிறார். அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தேரர்களை ஏன் கைது செய்கிறீர்கள் என்றார்.

அதன் போது சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல தமக்கும் அத்தகவல் கிடைத்துள்ளதாகவும் அது குறித்து தாம் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் சபாநாயகர் கருஜயசூரியவும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிவிக்கப்படும் என்றார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares