பிரதான செய்திகள்

வில்பத்து,முசலி பகுதியினை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித்

வில்பத்து பகுதிக்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
முசலி பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் வில்பத்து பகுதிக்குச் சென்று வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் விடுவிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

இதன் போது கொழும்பில் இருந்து வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் வருகை தந்ததோடு, முசலி வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மேலும் விடுவிப்பு செய்யப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மறுச்சுக்சிக்கட்டி,பாலைக்குழி, கரடிக்குழி உள்ளிட்ட இடங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

மேலும் கல்லாறு அமைச்சுக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து விளாத்திக்குளம் பகுதியில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட இடத்தையும் நேரடியாக சென்று இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.

இதன்போது ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளமையினையும் இராஜாங்க அமைச்சர் அவதானித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலைக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கான முக்கியமான அரிவித்தல்.

Maash

இலங்கையில் 6.2மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள்! புதிய முறை

wpengine

Update அதிகாலை யானை தாக்குதல் மீண்டும் ஒரு சிறுமி மரணம்

wpengine