விரைவில் முன்னால் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் வாய்ப்பு

மாத கணக்கில் தாமதமாகி வந்த நிலையில், நான்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியமிக்கப்பட உள்ள நான்கு ஆளுநர்களில் மூன்று பேர் முன்னாள் அமைச்சர்கள் எனவும் ஒருவர் முன்னாள் ஆளுநர் எனவும் கூறப்படுகிறது.

9 மாகாணங்களில் ஏனைய 5 மாகாண ஆளுநர் பதவிகளில் எந்த மாற்றங்களையும் செய்வதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ஏனைய நான்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட உள்ள புதிய ஆளுநர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.   

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares