விடுதலைப் புலிகள் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை.

சுனாமியால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்த போது விடுதலைப் புலிகளில் எவ்வித தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இந்நிலையில, கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முகம்கொடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் ஈட்ட முற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“சுனாமியால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்த போது படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. இது அரசாங்கத்திற்கு சாதகமாக அமைந்தது.


இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.


எனினும், இந்த திட்டங்களை விமர்சித்து எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் ஈட்ட முயற்சிக்கின்றன.
இதனிடையயே நாடாளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.


ஜூன் 20ம் திகதி தேர்தல் இடம்பெறுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு சுகாதார துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares