பிரதான செய்திகள்

விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு அணியாயம்! விசாரணை வேண்டும்

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென சுஹதாக்கால் என்ன அமைப்பு கோரியுள்ளது.

கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகின்றது.

1990ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தி 100 பேரை கொலை செய்தமை உள்ளிட்ட அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைப்பின் தலைவர் மொஹமட் சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுதனை விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் வெள்ளரிகள்

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டம்,பதவிக்காக செயற்பட கூடாது – டெனீஸ்வரன்

wpengine

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு நியூசிலாந்தில் அமோக வரவேற்பு!

Editor