பிரதான செய்திகள்

விக்னேஸ்வரன் ஒரு இனவாதி மேல் மாகாண முதலமைச்சர் குற்றசாட்டு

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

விக்னேஸ்வரன் இனவாதியல்ல என சிலர் கூறி வருகின்றனர். எனினும் எனக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர் ஓர் இனவாதியாவார்.

வட மாகாண முதலமைச்சர் வடக்கில் சிங்களவர்கள் கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்ள அனுமதி மறுத்து வருகின்றார்.

கட்டடங்களை நிர்மாணம் செய்வதற்கு சிங்களவர்கள் செய்யும் விண்ணப்பங்களை விக்னேஸ்வரன் நிராகரிக்கின்றார் என தகவல் கிடைத்துள்ளது.

வடக்கில் சிங்களவர்கள் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்ள விண்ணப்பம் செய்யும் போது வட மாகாண முதலமைச்சர் நேரடியாக அந்த விடயங்களில் தலையீடு செய்கின்றார்.

மேல் மாகாணத்தில் தமிழர்கள் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்ள அனுமதி கோரும் போது நான் அவ்வாறு செயற்பட்டால் மாகாணத்தில் வாழும் தமிழர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்.

விக்னேஸ்வரன் அவ்வாறு செயற்பட்டாலும் மேல் மாகாணத்தில் தமிழ் அதிகாரிகளை உள்ளடக்கி அபிவிருத் திட்டங்களை மேற்கொள்கின்றேன்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் குழுவில் தமிழ் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் மனிதப் புதைகுழி விலங்கால் கால்கள்

wpengine

அரச விவகாரங்கள் வெளியே! பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்கியது வட கொரியா

wpengine

எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

wpengine