பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு காய்வெட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு! கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கவில்லை

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவுஸ்திரேலியவின் சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர், இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறும் போது,

“நான் நேற்றைய நிகழ்விற்கு சென்றேன். ஆனால் மோடி எனக்கு கைலாகு கொடுத்து என்னை நலம் விசாரித்தார். நான் இருந்த இடத்திலிருந்து மோடி சற்று தொலைவிலேயே இருந்தார். அதனால் நான் அவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. எனினும் அவருடன் வருகை தந்திருந்த டாக்டர் ஜெய்சங்கரிடம் சில விடயங்களை தெரியப்படுத்தினேன்.

பலாலி விமான நிலையத்தை மக்களின் காணிகளை சுவீகரிக்காத வகையில் பிராந்திய விமான நிலையமாக மாற்றவேண்டும். இதனை வர்த்தக நடவடிக்கைக்கு பயன்படுத்த கூடியவாறு அமைக்க வேண்டும்.

தனுஷ்கோடி, தலைமன்னார் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜெயசங்கரிடம் தெரிவித்தேன்” என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

Related posts

மருதானை சண்டியர் போல செயற்படும் பிரதமர் – அமைச்சர் டிலான் பெரேரா

wpengine

கோட்டைக்கல்லாறு மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் புனரமைத்து தருமாறு வேண்டுகோள்.

Maash

வடபுல முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படாத வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்? முசலியில் அமைச்சர் றிசாத் கேள்வி.

wpengine