விக்டோரியா மின் நிலையத்தில் திருத்தப் பணிகள் – அமைச்சரவை அங்கீகாரம்

விக்டோரியா மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி இயந்திரங்களில் ஒன்றை திருத்தப் பணிகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதில் ஒரு பிறப்பாக்கி இயந்திரத்தின் ஸ்டாடரை (Stator) மாற்றுவதற்கான யோசனையை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்வைத்திருந்தார்.

விக்டோரியா மின் நிலையத்தல் 03 மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் இருப்பதுடன் அவை 30 வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது.

அந்த இயந்திரங்களினூடாக மேலும் பயன்பெறுவதற்காக அவை உடனடியாக பழுதுபார்க்கப்பட வேண்டும் என்று அது தொடர்பான தொழில்நுட்ப வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அதன்படி விக்டோரியா மின் நிலையத்தின் 03ம் இலக்க மின் பிறப்பாக்கி இயந்தித்தின் ஸ்டாடரை (Stator) மாற்றுவதற்கான கேள்விப்பத்திரம் கோர அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares