பிரதான செய்திகள்

வாழைச்சேனை பிரதேசத்தில் கைவிடப்பட்ட யானை குட்டி

(அனா)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று (புதன்கிழமை) காலை யானை தனது குட்டியை பிரசவித்து விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி தரசேன பிரதேசத்தில் மட்டக்களப்பு கொழும்பு புகையிரத பாதைக்கு அருகாமையில் வயல் பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தாய் யானையின் உதவியில்லாமல் குட்டி யானை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Related posts

மீண்டும் தனது பாதுகாவலரை விஜயகாந்த் தாக்கியதால் பரபரப்பு! (வீடியோ)

wpengine

பொரலஸ்கமுவ பள்ளிவாசல் மீது தாக்குதல்

wpengine

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களை தாக்கும் புதிய நோய்

wpengine