வாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டாம்

பெடரல் அமைப்புகள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தவேண்டாம் என ஜேர்மனியின் தரவு தனியுரிமை அமைப்பின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.


வாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தவேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


பெடரல் அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனியின் தரவு தனியுரிமை அமைப்பின் தலைவரான Ulrich Kelber தெரிவித்துள்ளார்.


பெடரல் அரசு கிளை நிறுவனங்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், கொரோனா போன்ற இக்கட்டான நேரங்களில்கூட தரவு பாதுகாப்பை அலட்சியப்படுத்தாமல் மதிப்பளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


வெறும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலமே தகவல்கள் வாட்ஸ் ஆப்புக்கு அளிக்கப்படுவதாகவும், அந்த தரவுகளை வாட்ஸ் ஆப் நேரடியாக பேஸ்புக்கிற்கு அனுப்பப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆனால், வாட்ஸ் ஆப் பயனர் குறித்த விவரங்களை பேஸ்புக்கிற்கு அனுப்புவதில்லை என வாட்ஸ் ஆப் மறுத்துள்ளது.


வாட்ஸ் ஆப்பில் யாருக்கு செய்தி அனுப்புகிறார்களோ அவர்கள் மட்டுமே செய்தியை படிக்க முடியும் வகையில் வாட்ஸ் ஆப் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ் ஆப்போ, பேஸ்புக்கோ அல்லது வேறு யாருமோ செய்திகளை படிக்க முடியாது என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares