வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை

ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இருந்த போது அடைந்த அனைத்து சாதனைகளும் 2015 க்குப் பின்னர் தலைகீழாக மாறியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும(Dullas alahapperuma) தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அரசாங்கம் தோல்வியடைந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதையே ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தினால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்தை இந்த அரசாங்கமே மீட்டெடுத்தது என்றார்.

இதேவேளை, கடந்த காலத்தில் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இருந்த போது அவரின் கீழ் அடைந்த அனைத்து சாதனைகளும் 2015 க்குப் பின்னர் தலைகீழாக மாறியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares