பிரதான செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய நடைமுறை! பயணக்கட்டுப்பாடு தொடர்பில்

நாட்டில் எதிர்வரும் வாரத்தில், மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க COVID – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் பரிந்துரைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதியிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்னும் 2 வருடங்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாதெனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழர்களால் தாயகத்தில் நடாத்தவிருக்கும் எழுகதமிழ் நிகழ்வு

wpengine

வவுனியா மரக்கடத்தல் வாகனத்தை விரட்டிப் பிடித்த போலீசார் . .!

Maash

அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாததால், முட்டை – கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

Maash