பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட நோயாளிகள் அவதி!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் தமது வேலை நிறுத்தப்போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இதன்காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக சிகிச்சைகளுக்காக வந்த வயோதிபர்கள், சிறுவர்கள் உட்பட பலரும் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பொரளை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 35 பேர் கைது!

Editor

உரிய பராமரிப்பின்றி காணப்படும் மன்னார் போக்குவரத்து பேருந்துகள்,

Maash

விகாராதிபதி மர்ம மரம், இன்று காலை சடலம் மீட்பு

wpengine