பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தரை தாக்கிய! திட்டமிடல் பணிப்பாளர்

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை கடமையில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகஸ்தரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாவட்ட செயலகத்தில் கணக்காளர் அறையின் கதவை திறந்து உள்ளே சென்ற சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான எஸ்.செல்வக்குமார் (வயது 60) என்பவரை அங்கே நின்ற திட்டமிடல் பணிப்பாளரான எஸ்.சபாலிங்கம் என்பவர் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் படு காயங்களுக்கு உள்ளானவர் வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பிரதம கணக்காளரின் முன்னிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏற்கனவே ஊடகவியலாளர்களை தாக்குதல் முயற்சி செய்தது மட்டுமல்லாது சில ஊழல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

குடிநீர் போத்தல் தொடர்பில் புதுச் சட்டம்

wpengine

ஹக்கீம் தனது 17 வருட அரசியலில் சாணக்கிய அரசியலும்,சரணாகதி அரசியலும்

wpengine

மன்னாரில் சமுர்த்தி சௌபாக்கியா வாரம் 3ஆம் கட்ட நிகழ்வு

wpengine