பிரதான செய்திகள்

வவுனியா-மன்னார் வீதியில் உள்ள அங்காடி ஹாட்வெயார் தீ

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் 6ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் வேப்பங்குளத்திற்கு அருகில் உள்ள 6ஆம் கட்டையில் சற்றுமுன்னர் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வாகனம் ஒன்று வருகைத்தந்த போதும் குறித்த வண்டியில் தண்ணீர் இல்லை என தெரிவித்து அந்த வண்டி திரும்பிச் சென்றுள்ளது.

எனினும் சுமார் 30 நிமிடமாக வன்பொருள் அங்காடி தொடர்ந்து எரிவதாகவும், திரும்பிச் சென்ற வண்டியைத்தவிற வேறு எந்த தீயணைப்பு வண்டியும் குறித்த இடத்திற்கு வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த தீ விபத்தினால் பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள், இன்று என்னைச் சந்தித்தார்:

wpengine

முஸ்லிம் பாடசாலை நிர்மாணிக்க பௌத்த இனவாத அமைப்புகள் எதிர்ப்பு

wpengine

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகம் நீரில் முழ்கியுள்ளது

wpengine