பிரதான செய்திகள்

வவுனியா பொலிஸ் மரணம்! மாட்டீக்கொண்ட மின்னல் ரங்கா

வவுனியாவில் வாகனமொன்றை ஓட்டிச்சென்று பொலிஸ் கன்ஸ்டபிள் ஒருவரின் மரணத்திற்கு காரணமான மின்னல் சிறிரங்கா தற்போது வசமாக மாட்டியுள்ள நிலையில் அவர் மிகவிரைவில் கைது செய்யப்படுவாரென பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மின்னல் சிறிரங்கா வாகனம் ஓட்டிச்சென்ற போது, அவருக்கு அருகில் இருந்த பொலிஸ் கன்ஸ்டபிள் கொல்லப்பட்டார்.

அப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஸவும், வவுனியா பொலிஸாரும் இதனை மூடிமறைத்து, குறித்த பொலிஸ் கன்ஸ்டபிள் வாகனத்தை ஓட்டியே விபத்தை ஏற்படுத்தி மரணமடைந்ததாக கூறிய மின்னல் ரங்கா அதிலிருந்து தப்பித்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது ஆட்சிக்குவந்த அரசாங்கத்திற்கும், பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் ரங்கா ஓட்டிச் செல்லும் போது கொல்லப்பட்ட பொலிஸ் கன்ஸ்டபிளின் மனைவி முறைப்பாடு செய்ததற்கு அமைய இந்த வழக்கு மீள் எடுக்கப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களமும் ரங்காவே வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, பொலிஸ் கன்ஸ்டபிளின் மரணத்திற்கு காரணமென உறுதி செய்துள்ளார்.

இந்நிலையிலேயே ரங்கா விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யூடியூப் தளத்தில் இருந்த காணொளியை பார்த்து துப்பாக்கி தயாரித்தவர் கைது.

Maash

வட்டி பிரச்சினை பிரதமர் மஹிந்தவை சந்தித்த மு.கா.ஹரீஸ்

wpengine

மின் கம்பி திருத்த வேலை! திடீர் மின்சாரம் ஒருவர் மரணம்

wpengine