பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களின் அவலம்!

வவுனியா பொது வைத்தியசாலையில் உரிய நேரத்தில் சில வைத்தியர்கள் வராமையினால் மாதாந்த சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நோயாளர்கள்,

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக விடிகாலையே வந்த நிலையில் வைத்தியர்கள் வராமையினால் நீண்டநேரமாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்தியர்கள் வருகை தராமையினால், உணவருந்துவதற்கோ அல்லது வேறு தேவைகளிற்கோ வெளியில் செல்லமுடியாமல் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே நோயாளர்களாக உள்ள நாங்கள் இவ்வாறான செயற்பாடுகளால் மென்மேலும் அசௌகரியங்களையே சந்தித்து நிற்கின்றோம்.

எனவே மாவட்டத்தின் முக்கிய வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறான நிலமையை சீர்செய்வதில், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். 

Related posts

பாராளுமன்றம் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லை- ரணில்

wpengine

இலங்கை தேசிய கூட்டுறவு ஆணைக்குழுவின் தலைவர் நியமனம்.

wpengine

வெள்ளப்பெருக்கு கொடுப்பனவு மேலும் மூன்று மாதம்

wpengine