பிரதான செய்திகள்

வவுனியா பொது வைத்தியசாலையில் தட்டுப்பாடு

வவுனியா பொது வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து வகை குருதிகளும் அவசரமாகத் தேவைப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், யுவதிகள், விளையாட்டு கழகங்கள், பொலிசார், இராணுவத்தினர், பொது அமைப்பினர், உத்தியோகத்தினர், எமது இரத்த வங்கியின் குருதிக் கொடையாளர்கள் அனைவரும் முன்வந்து இரத்த தானம் மேற்கொள்ள வேண்டும்.

இதன்மூலம் பல்வேறு நோய்களுடனும், விபத்துக்களுக்குள்ளானவர்களுக்கு உதவி செய்து அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடியும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியை சந்தித்த மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர்!

Editor

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா

wpengine

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் சுதந்திர தினச் செய்தி

Maash