பிரதான செய்திகள்

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் சிரமம்

வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, இரத்த பரிசோதனைக்கு நோயாளர்கள் இரத்தத்தினை வழங்கி விட்டு பரிசோதனை அறிக்கையை பெறச் செல்லும் போது தொலைந்து விட்டதாக தெரிவித்து மீண்டும் இரத்தத்தினை நோயாளரிடம் பெற்று பரிசோதனை செய்யப்படுகின்றது.

அத்துடன், நடந்து செல்ல முடியாத நிலையில் செல்லும் நோயாளர்களை காவு வண்டியில் வைத்து நோயாளருடன் வருபவரே தள்ளிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக நோயாளருடன் வயோதிபர்கள் செல்லும் பட்சத்தில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

மேலும், இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“லசந்த விக்கிரமதுங்க கொலை” நீதி அமைச்சரின் விசாரணை தேவை , சட்டத்துறை மீது அழுத்தம் வேண்டாம் .

Maash

அனைத்து கட்சித் தலைவர்களுக்கு விசேட அறிவிப்பு!

Editor

வடக்கு மாகாணத்திற்கு சிங்கள ஆளுநரை ஏற்கமுடியாது.

wpengine