பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பிரதேச செயலக வீட்டு திட்ட தெரிவில் பிரச்சினை! உத்தியோகத்தர்கள் பக்கசார்பு

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சரியான முறையில் பயனாளிகளைத் தெரிவு செய்து வீட்டுத்திட்டத்தினை வழங்கவில்லை என வன்னி மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், வவுனியாவில் புதிய சாளம்பைக்குளம் பகுதியில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் உதவியுடன் அவர்களின் உறவினர்களுக்கும் ஏனைய வசதி படைத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சரியான முறையில் பயனாளிகளைத் தெரிவு செய்து வீட்டுத் திட்டத்தினை வழங்கவில்லை.

மாறாக வசதி படைத்தவர்கள், பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் உதவியுடன் அவர்களின் உறவினர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் வவுனியா பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாதவர்களின் விபரங்கள், வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டவர்களின் விபரம், வீட்டுத்திட்டம் நிராகரிக்கப்பட்டவர்களின் விபரங்களை கேட்டு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக தொடந்து அவதானிப்புக்களை மனித உரிமைகள் ஆணைக்குழவினர் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கருணாவுடன் சேர்ந்து மஹிந்த அணிக்கு ஆதரவு

wpengine

நாட்டில் பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

Editor

இந்த நாட்டில் குரோதங்களை ஏற்படுத்திய ஜனாதிபதி என்றால் அது மஹிந்த தான் -சஜித்

wpengine