பிரதான செய்திகள்

வவுனியா நடமாடும் சேவையில் கலந்துகொண்ட ஜனாதிபதி,பிரதமர்,றிஷாட்

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவானது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவை சென்றடைந்துள்ளது.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் சற்று முன் வவுனியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களின் வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்னல் ரங்காவினால் மூடிமறைத்த விபத்து! ரங்கா கைது செய்யப்படலாம்.

wpengine

ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

wpengine

மன்னார் புதைகுழி அகழ்வு 133ஆவது நாளாக தொடர்கின்றது.

wpengine