செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா நகரப் பகுதி உணவகம் மீது தாக்குதல், ஒருவர் கைது.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த வவுனியா பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Related posts

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கூடிய ஆசனங்கள் பெற்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும். – சுமந்திரன்.

Maash

மனைவியை சுட்டுக் கொன்ற கணவன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணம்.

Maash

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறந்து வைப்பு!

Editor