வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

வவுனியா, செட்டிகுளம் மகா வித்தியாலத்தில் 2015ம் ஆண்டு ஐந்தாமாண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் பரீட்சையில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கான பாராட்டு விழா, அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.அன்ரன் சோமராஜா, கௌரவ விருந்தினர்களாக வடமாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞானம்) க.அ.சிவனருள்ராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் வடமாகாணம் (தொழில்நுட்பம்) து.லெனின் அறிவழகன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது சாதனை மாணவர்களுக்கு கௌரவிப்புக்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares