பிரதான செய்திகள்

வவுனியா- செட்டிகுளத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்று (22)  செட்டிகுள இளைஞர் அமைப்பினாலும், முகநூல் நண்பர்களினாலும் இப்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செட்டிகுளம் விவேகானந்தர் உருவ சிலையடி முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் செட்டிக்குள இளைஞர் சம்மேளனம், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், வர்த்தக சங்கம், மதகுருமார்கள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் எங்கள் அடையாளம் ஜல்லிக்கட்டு எங்கள் கலாச்சாரம், உங்களுக்காய் நாங்கள் எங்களுக்காய் நீங்கள், தமிழனுக்காய் வா தமிழா, உரிமைக்காய் குரல் கொடுப்போம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Related posts

பர்தாவை கழற்றிவிட்டு பரீட்டை எழுதுங்கள் கம்பளையில்

wpengine

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் ; பிரதமர் கண்டனம்

wpengine

இந்தோனேசியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine