பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவுக்கு 2200 பொருத்து வீடுகள் இணைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம்

வவுனியாவிற்கு 2200 வீடுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளரும், சிறைச்சாலை கண்காணிப்பாளருமான எம்.எம்.சிவலிங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருத்து வீடுகளைப் பெற்றுக்கொள்ள நான்கு பிரதேச செயலகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி பொதுமக்களின் விருப்பத்திற்கு அமைய அவர்களுக்கு பொருத்து வீடுகளை பெற்றுக்கொடுக்க டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பொருத்து வீடுகளில் வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு 500 வீடுகளை வழங்குவதற்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திலுள்ளவர்களுக்கு 119 பொருத்து வீடுகளும், வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 07 வீடுகளும், வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 1074 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மிகுதியாகவுள்ள 500 வீடுகளை மேலதிகமாக விண்ணப்பித்துள்ள நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முஸ்லிம் குடியேறிகள் சிலரை போப் இத்தாலிக்கு அழைத்துச் சென்றார்

wpengine

பேருவளை பகுதியில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine

இராணுவத்தினரை விடுவித்தால் மாத்திரமே தமிழ் கைதிகளை விடுவிக்க அனுமதிப்பேன்

wpengine