வவுனியாவுக்கு வருகை தந்த சிங்க லே அமைப்பு

இனவாத அமைப்பான சிங்க லே வவுனியா பிரதேசத்திற்கு  வருகை தந்து சிங்கள மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளது.

வவுனியா, அவுரந்துலாவ பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்களே அமைப்பின் தலைவர் ஜம்துரே சந்திரரட்ண தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து அப்பகுதியில் குடியிருக்கும் சிங்கள மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் அப்பகுதியில் சிங்க லே அமைப்பின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான சுகாதார வைத்திய நிலையம் ஒன்றினையும் திறந்து வைத்தனர்.vavu-singa-le-01

அத்துடன் அப்பகுதியில் வாழும் விசேட தேவைக்குட்பட்டோர், வறுமைக்கோட்டிற்குட்பட்டோர், பன்சலையில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் எனப் பலருக்கும் பல்வேறு விதமான உதவித் திட்டங்களை வழங்கி வைத்துள்ளனர்.

கடும் போக்கு கொள்கையுடன் தென்பகுதியில் உருவாகியுள்ள சிங்க லே அமைப்பின் முதலாவது வடபகுதி பயணமாக இது அமைந்திந்தது.vavu-singa-le-03

இதேவேளை, அண்மையில் வடபகுதியின் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவின் கலாபேபஸ்வேவ போன்ற பகுதிகளுக்கு பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர் அவர்களும் வருகை தந்து அங்குள்ள சிங்கள மக்களைச் சந்தித்து இனவாதக் கருத்துக்களை அவர்களிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares