பிரதான செய்திகள்

வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் கேரள கஞ்சா

வவுனியாவில், கேரள கஞ்சா வைத்திருந்த பெண் ஒருவரை நேற்றைய தினம் போதை ஒழிப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த பெண்ணை சோதனையிட்டபோது அவரது கைப்பையில் இருந்து கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண்ணின் கைப் பையினுள் பொதி செய்யப்பட்ட 200 கிராம் கேளரா கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை விவகாரம் விஸ்பரூபம் எடுத்து முகத்திரைக்கான தடை விதிக்கப்பட்டது.

wpengine

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும்.

wpengine

சம்பளம்,ஓய்வூதியம் தொடர்பில் நடவடிக்கை

wpengine