வவுனியாவில் வீதி விபத்து ! முதியோர் படு காயம்

வவுனியா – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நேற்று காாலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த முதியவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற கப் ரக வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கர வண்டியில் பயணித்துகொண்டிருந்த முதியவருடன் மோதி வீதிகரையில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பத்துடன் மோதியுள்ளது.


விபத்தில் உயர் அழுத்த மின்சார தூண் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனத்தில் சரிந்து விழுந்துள்ளது.
எனினும் உடனடியாக விரைந்து வந்த மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 59 வயதுடைய மகேஷ்வர ரட்ணசிங்கம் என்ற முதியவரே படுகாயமடைந்துள்ளார்.


எனினும் குறித்த கப் ரக வாகனத்தின் சாரதி அதிஸ்டவசமாக காயங்களின்றி உயிர் பிழைத்துள்ளார்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares