பிரதான செய்திகள்

வவுனியாவில் விக்னேஸ்வரன்,சத்தியலிங்கம் மோதல்

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் வருகைதந்துள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

சட்டவிரோத புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் சோதனை – இருவர் கைது!

Editor

இம்மாதம் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிப்பு .

Maash

சதொச நிறுவனத்தின் தலைவர் கைது

wpengine