பிரதான செய்திகள்

வவுனியாவில் வாள்வெட்டு! இருவர் காயம்

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 07.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட இளைஞர் குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் கடையொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டிகள் இரண்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனிடையே, தாக்குதலை மேற்கொண்ட நபர்களினது மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன், தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் கூமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியால் சென்றவர்கள், கடைகள், வாகனங்கள் மீது குறித்த இளைஞர் குழு தமது கைவரிசையைக் காட்டியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை நிலவியுள்ளது.

Related posts

6ஆவது இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி

wpengine

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

wpengine

மொட்டுக் கட்சியில் பிளவுகள் சாத்தியமா?

Editor