செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் மின்சார வயரின் மீது தென்னை மரம். – அகற்றுவதில் அசமந்தம் .

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்துவீழ்ந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதில் மின்சார சபை அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் இன்று (17) காலை முதல் கடும்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் பூந்தோட்டம் சந்தியில் வீதிக்கரையில் நின்ற தென்னைமரம் முறிந்து மின்னார வயரின் மீது வீழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இது தொடர்பாக மின்சாரசபைக்கும். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் மரம் முறிந்து நான்கு மணி நேரம் கடக்கின்ற நிலையிலும் அது இன்னமும் அகற்றப்படவில்லை.

குறித்த மரம் பாதையின் நடுவில் ஆபத்தான முறையில் காணப்படுகின்றது. பொதுமக்கள் அதனூடாகவே பயணம் செய்து வருகின்ற நிலையினை காணமுடிகின்றது.

Related posts

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊழல்! லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

றிஷாட் மீது போலிகளை பேசும் ஹக்கீம்,சிங்கள இனவாதம்

wpengine

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

Maash