பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஐவர் கைது!

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸார் நேற்றிரவு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதில் வைரவபுளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தை சேர்ந்த இருவர்களிடமிருந்து 620 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், மற்றைய மூவரிடம் இருந்து 4 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பாகிஸ்தான் மீதான டம்பின் புதிய பாசம்! கட்டிபிடி வைத்தியம் செய்யுங்கள்

wpengine

சம்மாந்துறை பிரதேச சபை மயில் வசம்…!

Maash

மன்னார் செயலக கட்டடம் திறந்து வைப்பு! பிரதமருக்கு நினைவு சின்னம் வழங்கிய றிஷாட்

wpengine