பிரதான செய்திகள்

வவுனியாவில் பாடசாலை அதிபரின் அலுவலகம் தீ

வவுனியா – சேம மடு , சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் அதிபரின் அலுவலக அறையில் நேற்று இரவு தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஓமந்தை காவற்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவல் காரணமாக அதிபர் அலுவலக அறையில் இருந்த அனைத்து ஆவணங்களும் மற்றும் மின் உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா அல்லது மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இந்த தீப்பரவல் காரணமாக பாடசாலையின் வேறு கட்டிடங்களுக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

Related posts

சம்பந்தன் மீது முஸ்லிம்களுக்கு துளியேனும் நம்பிக்கை இல்லை – ஹெல உருமய

wpengine

உசைன் போல்ட் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்- தாய்

wpengine

முஸ்லிம் காங்கிரஸை கட்டிக் காத்த கர்மவீரர்களுக்கு சிறப்பு கௌரவம்

wpengine