வவுனியாவில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (25) பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்ற மூன்று நபர்கள் இணைந்து பாடசாலை வளாகத்தில் நின்ற ஆங்கில பாட ஆசிரியரான சாந்தகுமார் (வயது- 45) என்பவர் மீது கட்டையினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மற்றைய ஆசிரியர் இதனை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர்.

தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்ட ஆசிரியர் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பாடசாலையில் பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் ஒன்று கூடியுள்ளமையினால் பதட்ட நிலைமை நிலவி வந்ததுடன் பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares