பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் நகை கொள்ளை!

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் என தெரிவித்து 5 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் கார் ஒன்றில் சென்ற குறித்த நபர்கள் வவுனியா தம்பனை புளியங்குளம் மற்றும் பத்தினியார் மகிழங்குளம் பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்று தங்களை காவல்துறையினர் என அடையாளப்படுத்திக்கொண்டு, வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதனை நம்பி வீட்டின் உரிமையாளர்கள் அவர்களை அனுமதித்த நிலையில் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு அங்கிருந்த தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினை கனேடியத் தூதுவரை சந்தித்த றிஷாட்

wpengine

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம்

wpengine

வஸீம் தாஜு­தீனின் படு­கொ­லை ஒருபார்வை

wpengine