பிரதான செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய குடும்பத்தர்.

வவுனியா, கள்ளிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மனைவி மற்றும் பிள்ளைகள் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த நபர் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை உறவினர்களே அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


பெரியசாமி மோகனதாஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் விவகார அமைச்சு வேறு மதத்தவருக்கு வழங்கப்பட வேண்டும்

wpengine

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு! அமைச்சர் றிஷாட்

wpengine

வில்பத்து தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக்குற்றச்சாட்டு

wpengine