வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்க றிஷாட் கோரிக்கை

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயளாலரை தொடர்பு கொண்டு. முழு நாட்டிலும் Lockdown பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட 5000/- ரூபாய் கொடுப்பனவு போன்று கடந்த 10 நாட்களாக LOCKDOWN ல் உள்ள பட்டாணிச்சூர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள (பட்டகாடு . வேப்பங்குளம் .பட்டாணிச்சூர் )மக்களுக்கும் உடனடியாக 5000/- கொடுப்பனவு வழங்குமாறும் .அத்தோடு ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும் 5000/ ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இன்றைய தினம் 850 பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்க அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி
MS அப்துல் பாரீ -ARM லரீப்
வவுனியா
நகர சபை உறுப்பினர்கள்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares