பிரதான செய்திகள்

வவுனியாவில் சட்டவிரோதமான கடை! நகர சபை கவனம் செலுத்துமா

வவுனியா யாழ். வீதியில் விவசாய பண்ணைக்கு முன்பாக சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிலையமொன்று அமைக்கப்பட்டு வருவது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்துமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா யாழ். வீதியில் விவசாய பண்ணைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக சோளம் விற்பனையில் ஈடுபட்டிருந்த சகோதர மொழியைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் கடையொன்றினை அமைத்து அதனுள் உணவுப்பொருட்கள் மற்றும் தேனீர் என்பவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் இவ்வாறு கடை அமைத்து வருவது தொடர்பில் இதுவரை நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் வவுனியாவில் நகரசபையின் அசமந்தப்போக்கினால் சட்டவிரோதமான வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அவற்றினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக வர்த்தக நிலையத்தினை அமைப்பது மாத்திரமின்றி அதனுள் சுகாதார சீர்கேடான முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்வது தொடர்பிலும் நகரசபை கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

றிஷாட்டை பழி தீர்க்க 10வருட திருடனுடன் கூட்டு சேர்ந்த டயஸ்போராவின் முசலி முஜூப் றஹ்மான்

wpengine

சவூதி அரேபியாவின் நெருக்கடி! இஸ்ரேல் நாட்டில் தடை

wpengine

பகிரங்க மடலுக்கு அமீர் அலியின் பதில்

wpengine