பிரதான செய்திகள்

வவுனியாவில் குழந்தை கடத்தல் பரபரப்பு சம்பவம்

வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்தல் சம்பவத்தில், கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக குறித்த குழந்தையின் தந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

வவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிநாட்டிலுள்ள குழந்தையின் தந்தை வவுனியா பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி “கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாகவும் அதனை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குழந்தையின் தாயாருக்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட குழந்தையின் தாயார் மற்றும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று குழந்தையின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

Related posts

சீனாவின் மிகவும் வயதான 135 பெண் மரணம்.

wpengine

25 வயது 22 வயதுடைய காதல் ஜோடியின் சடலம் மீட்பு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதமர் வத்திக்கானில், விளக்கம்.

wpengine