பிரதான செய்திகள்

வவுனியாவில் கடையொன்று தீயினால் முற்றாக சேதம்

வவுனியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – ஈரட்டை பெரியகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடையொன்றிலேயே நேற்று இரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தின் போது மோட்டார் சைக்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி உட்பட பல பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தீ பரவல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து கூறமுடியாது

wpengine

EPF-ETF மனு விசாரணையின்றி நிராகரிப்பு!

Editor

உள்ளூராட்சி அதிகாரசபைகள் சட்டமூலம் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றம்.

Maash