பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் கஞ்சா போதை பொருளுடன் பெண்ணொருவர் கைது!

வவுனியா போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் மூலம், வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

உக்கிளாங்குளம் – கூமாங்குளம் வீதியில், முனியப்பர் கோவிலடிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த கஞ்சாப் போதை பொருளை கைப்பற்றிய பொலிஸார், இது தொடர்பில் குடும்ப பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Related posts

எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கத்திடம் அனுமதி

wpengine

”மஸ்”தானா முஸ்லிம் சமூகப் பிரச்சினை? தொலைக்காட்சி நேயர்கள் கேள்வி.

wpengine

பல வருடங்களின் பின் மீண்டும் நாட்டை அச்சுறுத்தும் “டெங்கு 3” வைரஸ்!

Editor